கோபாலபுரத்தில் கண்ணீருடன் காணப்படும் கருணாநிதி குடும்பத்தினர்
கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக உள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோபாலபுரத்தில் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் காணப்படுகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வருகிறார். தற்போது இன்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நலம் தொடர்ந்து கவலைகிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு பணியை உறுதிப்படுத்த காவல்துறையினர் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கருணாநிதி குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்தில் உள்ளனர்.
துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லம் வந்துள்ளனர்.