1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:31 IST)

தீபாவின் வருத்தப்படாத வாலிபர் சங்கம்: வீடியோ பாருங்க!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த 24-ஆம் தேதி எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை உருவாக்கி அரசியலில் இறங்கினார். இதனையடுத்து அவரை கலாய்த்து மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாக வருகிறது.


 
 
கடந்த காலங்களில் வைகோ போன்றவர்களை கலாய்த்து கலாய்த்து டயர்ட் ஆன நெட்டிசன்களின் கையில் புது வரவாக சிக்கியுள்ளார் தீபா. தீபா பேசும் விதத்தையும் அவரது தெளிவில்லாத பதில்களையும் வைத்து பலரும் அவரை இணையதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

 

 
 
இந்நிலையில் இணையத்தில் தீபாவை கலாய்க்கு ஒரு வீடியோ வைரலாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் கலகலப்பான வீடியோ தான் அது. தீபாவை போன்று பாடி லங்க்வேஜுடன் அவரின் பேச்சையும், அரசியல் முதிர்ச்சியின்மையையும் கலாய்த்து தள்ளியிருக்கிறார் அவர். வீடியோவை பாருங்க டைட்டிலுக்கான கரணம் அதில் இருக்கு.