வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 31 மே 2019 (09:05 IST)

கார்த்திக் சிதம்பரம் வழக்கில் மாற்றம் – எம்.பி. ஆனதால் சலுகை !

கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ். ஊழல் சம்மந்தமான வழக்கை எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சராக ப சிதம்பரம் இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகக் கூறி ப சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இப்போது கார்த்தி சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று சிவகங்கை தொகுதியின் எம்.பி ஆகிவிட்டதால் அவர் மீதான இந்த வழக்கு எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.களுக்கான சிறப்பு  நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ரவுஸ் அவென்யூ கோர்ட் காம்ளக்ஸில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் இவ்வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குப் பின் விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.