வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (12:42 IST)

கமல்ஹாசன் முதலில் ஒரு முட்டாள்; அப்புறம்....: வம்பிழுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

கமல்ஹாசன் முதலில் ஒரு முட்டாள்; அப்புறம்....: வம்பிழுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

நடிகர் கமல்ஹாசனை ஆடம்பர முட்டாள் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.


 
 
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக அரசியல் குறித்து பதிவுகளும் கருத்துக்களும் அதிகமாக கூறிவருகிறார். இவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் அதிகமக வரவேற்பு காணப்படுகிறது. ஆனால் கமல்ஹாசனின் கருத்துக்கு பாஜக தலைவர்களும் அதிமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
இதனால் கமலுக்கும் பாஜக, அதிமுகவினருக்கும் கருத்து யுத்தம் நீடித்து வந்தது. முதலில் கமலை சுப்பிரமணியன் சுவாமி தான் விமர்சித்து வந்தார். கமலை நாகரீகம் இல்லாமல் திட்டி வந்தார். ஆனால் சமீப காலமாக அவர் கமல் குறித்து கருத்து கூறாமல் இருந்து வந்தார்.

 
இந்நிலையில் நேற்று சுப்பிரமணியன் சுவாமி கமல் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் ஆடம்பர முட்டாள் கமல் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர இருப்பதாக தனக்கு தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். தனது மற்றொரு டுவிட்டில், முதலில் கமல் ஒரு முட்டாள், அப்புறம் அவர் முட்டாள்களின் கட்சியில் சேர்கிறார் என கூறியுள்ளார்.