1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (15:55 IST)

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்: கமல்ஹாசன்

நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்
 
மக்கள் நீதி மய்யத்தின் தொழிற்சங்க அறிமுக விழா இன்று சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட கமலஹாசன் பேசியபோது கண்ணதாசன் வசனம், கலைஞர் வசனம், இளங்கோவன் வரிகள் ஆகியோர்களின் எழுத்தை புரிந்து கொண்ட தமிழக மக்களுக்கு என் வசனம் புரியாதா? நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும் என்று கூறினார் 
 
மேலும் மேலும் தமிழ்நாடு வரைபடத்தை கிழிக்க முயற்சித்தும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்றும் அவர் கொங்குநாடு குறித்த முயற்சிக்கு தனது இருப்பை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தற்போதைய நிலையில் காந்தி போன்ற தலைவர் தான் தேவை என்றும் இனிமேல் இந்தியாவில் காந்தி போன்றவர்களால் தான் நல்ல அரசியல் செய்ய முடியும் என்றும் எனது தலைவர் காந்தி என்று சொல்வதால் எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கமலஹாசன் தெரிவித்தார்