வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (06:43 IST)

அத்திவரதரை தரிசனம் செய்த கி.வீரமணி மகன்: நாத்திகம் பொய் வேஷமா?

கடவுள் மறுப்பு கொள்கையில் குறிப்பாக இந்து கடவுள்களை கேலி செய்யும் திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் மகனும், மருமகளும் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, பகுத்தறிவு பகல் வேஷத்தை வெளிப்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
 
திராவிட கழக தலைவர் கி.வீரமணி கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் உடல்நலம் பெற அவரது மகனும் மருமகளும் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பெரும்பாலான நாத்திகரின் குடும்பத்தினர் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் கேட்டால் 'அது அவர்களின் சொந்த விருப்பம்' என்று சமாளிப்பு பதில்தான் நாத்திகர்களிடம் இருந்து வரும். நாத்திகர்களின் கொள்கையை அவரது குடும்பத்தினர்களே ஏற்றுக்கொள்ளாத நிலையில அந்த கருத்துக்களை மற்றவர்களிடம் திணிப்பது சரியா? என்பதை ஒருநிமிடம் அவர்கள் யோசிக்கவில்லையே என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
 
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னரே கி.வீரமணி தனது மகனின் திருமணத்தை ஒரு விநாயகர் கோவிலில் தான் நடத்தினார் என்று அந்த திருமணத்தில் தலைமையேற்ற கராத்தே தியாகராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். எனவே அரசியலுக்காக நாத்திகம் பேசி வரும் இவர் போன்ற பொய் பகுத்தறிவாளர்களின் முகத்திரைகள் கொஞ்சம் கொஞ்சமாக கிழிந்து வருவதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் விளாசி வருகின்றனர்.
 
இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில், 'வீரமணி மகன் அன்புராஜ் அத்திவரதரை தரிசித்து வணங்கியதாக தகவல் வந்தது.  மேல் விவரம் கிடைக்குமா? என்று கூறியுள்ளார்.