1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2017 (21:17 IST)

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நீதிபதிக்கு பீட்டா விருது

2014ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு, 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் என்ற விருதை வழங்கியுள்ளது.


 

 
இதுகுறித்து தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சக்ரபாணி என்பவர், நீதிபதி ராதாகிருஷ்ணன் பீட்டாவிடம் பெற்ற விருதை திரும்ப அளிக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
124(7) அரசமைப்பின் படி நீதிபதி ஒருவர் வழக்கு சார்ந்த அமைப்பிடம் தீர்ப்பு அளிக்கும் முன் அல்லது பின் எந்த ஒரு பரிசும் பெறக்கூடாது. ஆனால் 2014ஆம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி, 2015ஆம் ஆண்டில் பீட்டா அமைப்பிடம் இருந்து 2014ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதன் என்ற விருதை பெற்றுள்ளார். 
 
இது அரசமைப்புக்கு எதிரானது என்பதால் அவர் விருதை திரும்ப கொடுக்கும்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.