திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (11:01 IST)

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் திமுக பிரமுகர்கள் சொத்து பட்டியலை வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உள்பட அனைத்து கட்சி தலைவர்களின் சொத்து பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். 
 
இதற்கு அதிமுகவினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்றும் வளர்த்த கடா மார்பில் பாயக்கூடாது என்றும் கூட்டணியில் இருந்து கொண்டே மாறுபாடாக பேசக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
 
50 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு அரசியல் முதிர்ச்சி உள்ளது என்றும் எந்த காலத்திலும் எதற்காகவும் அதிமுக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
Edited by Mahendran