1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 21 ஜனவரி 2017 (11:26 IST)

வெக்கம்கெட்ட திமுக ஜல்லிக்கட்டு போராட்டத்தை சீர்குலைக்கிறது: ஜடேஜா அதிரடி!

வெக்கம்கெட்ட திமுக ஜல்லிக்கட்டு போராட்டத்தை சீர்குலைக்கிறது: ஜடேஜா அதிரடி!

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள், மாணவர்கள் என லட்சக்கணக்கான பேர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இந்தியாவையே தமிழகத்தை நோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.


 
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திமுகவினரும் சில போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறவழியில் அமைதியாக போராட்டம் நடத்தி வரும் வேளையில் திமுகவினர் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டது.

 
மாணவர்களின் போராட்டத்தின் மீதான கவனத்தை திசை திருப்புவதாகவும், மாணவர்களே அறவழியில் போராடும் போது திமுகவினர் ஏன் ரயில் மறியலில் ஈடுபட வேண்டும் என கடுமையாக விமர்சித்தனர். இதனால் இந்த போராட்டமும் பிசுபிசுத்துப்போனது.

 
இந்நிலையில் திமுகவின் இந்த போராட்டத்தை இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்த்ர ஜடேஜா கடுமையாக விமர்சித்திருக்கிறார். இந்த விமர்சனத்தின் போது திமுகவை கடுமையான வார்த்தைகளால் அவர் திட்டியுள்ளார்.
 
ஜடேஜா தனது டுவிட்டரில், மாம்பலம் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்ததாக மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். வெட்கமற்ற திமுக அமைதியாக நடக்கும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை சீர்குலைத்து அரசியல் செய்கிறது என கூறியிருக்கிறார்.


 
 
மேலும் ஜல்லிக்கட்டுக்கா திமுக மாநிலம் தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. முட்டாள்களே மெரினா கடற்கரையில் நடக்கும் போராட்டத்துக்கு போராட்டக்காரர்கள் எப்படி சென்றடைவார்கள்? எனவும் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியாக நடைபெற்று வந்தது வெக்கம்கெட்ட திமுக அதில் சேர்ந்து அதனை சீர்குலைக்கும் வரை என கடுமையாக விமர்சித்துள்ளார் ஜடேஜா.