1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 31 அக்டோபர் 2018 (15:13 IST)

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய இடைக்கால தடை

ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் மருந்துச்சீட்டுகள் இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்கப்படுவதால் பொதுமக்களுக்கு காலாவதியன மற்றும் போலி மருந்துகளே கிடைக்கும் சூழல் உருவாகிறது.இதனால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .எனவே இந்த ஆன்லைன் மருந்து விற்பனையை  தடுக்கப்பட வேண்டும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி   ஆன்லைனில் மருந்துகள் விற்பதற்கு இடைகால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இநத வழக்கு விவகாரம் குறித்து பதிலளிக்குமாறு மாநில சுகாதாரத்துறைக்கு நிதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.