வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (08:48 IST)

ரூ.219 .52 கோடி செலவில்43 துணை மின் நிலையங்கள்:எடப்படி திறந்துவைப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.219.52 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 43 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி திறந்துவைத்தார்.

தமிழகத்தில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இதற்கான பணிகள் மும்முரமாக நடந்துவந்தன.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்வும் போதுமான மின்சாரம் கிடைப்பதில்லை எனவும் பல வருடங்களாக தமிழக அரசின் மீது குற்றசாட்டு வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில், திருவள்ளூர், ஈரோடு, காஞ்சிபுரம் மதுரை, கரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, புதுகோட்டை, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ரூ 219 கோடியே 52 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 43 துணை மின்நிலையங்களை, வீடியோ கான்ஃப்ரனஸ் மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், உட்பட் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.