வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2016 (11:28 IST)

தமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது என தேமுதிக மாநில மகளிரணி செயலளார் பிரேமலதா கூறியுள்ளார்.


 
 
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தேமுதிக மகளிர் அணி செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது அவரது படம், அவரை பற்றிய செய்தி வெளியில் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், ஜெயலலிதா பற்றி இப்போது எந்த தகவலும் வரவில்லை.
 
மேலும், ஜெயலலிதா இருக்கும்போது அரசின் கோப்புகள் கையெழுத்திடப்பட்டது. ஆனால், இப்போது கோப்புகளில் கையெழுத்து ஆகவில்லை. இதனால் தமிழகத்தில் மறைமுகமாக கவர்னர் ஆட்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றார்.