மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவர்
வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரும்படி, மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கோவையில் அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் அந்த பெண் மருத்துவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷ்னரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தன் கணவன், தன்னை ஆபாசமாக படம் எடுத்து, சேலத்தில் உள்ள எனது வீட்டை அவர் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்றும், விவாகரத்து கேட்டும் தன்னை மிரட்டுவதாகவும், சொன்னபடி செய்யவில்லை என்றால் தான் வைத்திருக்கும் படத்தை இணையத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டுகிறார்.
இதனால் பயந்துபோன நான், விவாகரத்து கொடுத்ததுடன், எனது பெயரில் இருந்த வீட்டையும் அவருக்கு எழுதி கொடுத்து விட்டேன். தற்போது ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்கவும், அதனை என்னிடம் ஒப்படைக்கவும் ரூ.10 லட்சம் கேட்டு என்னை மீண்டும் மிரட்டுகிறார் என மனுவில் குறிப்பிட்டிருந்தார் அந்த பெண் டாக்டர்,
பெண் டாக்டரின் புகாரின் பேரில் அவரது கணவன் மீது 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்.