1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:35 IST)

அமெரிக்க அமைச்சர் என்னை மிரட்டினார்: இம்ரான்கான் திடுக்கிடும் தகவல்!

imrankhan
அமெரிக்க அமைச்சர் தன்னை மிரட்டியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சியை கவிழ்க்க வெளிநாடு ஒன்று சதி செய்வதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது தனக்கு அமெரிக்க அமைச்சர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார்
 
அமெரிக்க துணை அமைச்சர் டொனால்டு லு தன்னை மிரட்டியதாக இம்ரான்கானின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
பாகிஸ்தானின் இன்றைய நிலைக்கு அமெரிக்கா தான் காரணமா என்ற கேள்வி தற்போது பாகிஸ்தான் மக்களிடம் எழுந்துள்ளது