1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 15 மார்ச் 2017 (14:44 IST)

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - தினகரன் பேட்டி

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டிவி. தினகரன் போட்டியிடுகிறார்.


 

 
பரபரப்பாக எதிர்பாக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் தினகரன் போட்டியிடுகிறார் என இன்று காலை அறிவிப்பு வெளியானது. 
 
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினகரன், ஆட்சி மன்ற குழுவின் விருப்பப்படி நான் ஆர்.கே.நகர் தொகுதில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் திமுகவை மட்டுமே நாங்கள் எதிர் அணியாக கருதுகிறோம். கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன்.  மறைந்த முதல்வர் ஜெ.வின் நலத்திட்டங்கள் அங்கு நிறைவேற்றப்படும். வருகிற 23ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்வேன் என அவர் தெரிவித்தார்.
 
மேலும், தன்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்த ஆட்சி மன்ற குழுவிற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் கூறினார்.