நாளைக்கு நான் எப்படி வருவேன் ? ஸ்டாலின் சூசகம் !
நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எதிர்க்கட்சியான திமுக பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் தான் படித்த பள்ளிக்கு சென்றார்.
அங்கு, 1970 ஆண் ஆண்டு மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. அதில் தன் நண்பர்களைச் சந்தித்தார்.பள்ளி மைதானம், பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சுற்றி வந்து பார்வையிட்டு, தமது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது உரையாடிய ஸ்டாலின், நான் படித்த எம்.சிசி பள்ளிக்கு மேயராகவும், துணைமுதல்வராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் வந்த நான் அடுத்து எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அடுத்த சட்டசபைத் தேர்தலில் ஜெயித்து முதல்வராகும் எண்ணத்தில்தான் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார் என பலரும் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.