1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (14:44 IST)

இந்தி மொழியை ஆதிக்க மொழியாகவும் மாற்ற நினைப்பதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்?- அமைச்சர் மனோ தங்கராஜ்

MANO THANGARAJ
இந்தி மொழியை ஆட்சி மொழியாகவும், ஆதிக்க மொழியாகவும் மாற்ற நினைப்பதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும் என தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் இந்தி மட்டுமே படித்திருந்தால் மட்டுமே சில வேலைகளுக்கு தகுதி பெறுவார்கள் என்றும் ஆட்சேர்ப்புக்கான தேர்வின்போது கட்டாயமாக ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியை முதன்மைப் படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாத் தகவல் வெளியாது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வரும்  நிலையில், அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின், பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், 5.5 கோடி மக்கள்தொகை, கொண்ட தென்னாப்பிரிக்காவில் 11 மொழிகளும், 60 லட்சம் பேர் மட்டுமே கொண்ட சிங்கப்பூரில் 4 மொழிகளும், 80 லட்சம் பேர் கொண்ட சுவிட்சர்லாந்தில் 4 மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கின்றன.  எனில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருக்கும் 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக மாற்றுவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?

இந்திய நாட்டில் குறிப்பிட்ட சாரர் மட்டுமே பேசும் இந்தி மொழியை ஆட்சி மொழியாகவும், ஆதிக்க மொழியாகவும் மாற்ற நினைப்பதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj