வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 2 ஏப்ரல் 2017 (22:08 IST)

ஓபிஎஸ் உயிருக்கு ஆபத்தா? மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சசிகலா அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.



 


சமீபத்தில் தேனி அருகே ஓபிஎச் சென்ற கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் பாதுகாப்பு வழங்குமாறு ஓபிஎஸ் அணியினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேண்டுகோளை அடுத்து ஓபிஎஸ் அவர்களுக்கு ஆபத்து உள்ளதை உணர்ந்த மத்திய மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு, ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. பன்னீர் செல்வத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையில் 11 சிஆர்பிஎஃப் வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.