வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 9 அக்டோபர் 2024 (15:58 IST)

சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம்..!

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில், மஞ்சள், ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழ் சுழற்சி நிலவி இருப்பதன் காரணமாக இன்று மாலை கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், நாமக்கல், நீலகிரி, கோவை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதை அடுத்து, தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran