செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (11:02 IST)

பிற்பகல் 1 மணி வரை சென்னை உள்பட 16 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Rain
பிற்பகல் ஒரு மணி வரை சென்னை உள்பட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையும் தொடங்கி விட்டதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், இன்று பிற்பகல் ஒரு மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதேபோல், அரியலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Mahendran