இன்றும் குறைந்தது தங்கத்தின் விலை!!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை மெல்ல குறைந்து வந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளால் பலர் தங்கத்தில் அதிகமாக முதலீடு செய்ய தொடங்கியதால் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக ஏற்றமும் இறக்கமுமாக இருந்த தங்கத்தின் விலை 40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ஒரு சவரன் 39,392 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 96 ரூபாய் குறைந்து 39,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் நேற்றைய விலையில் இருந்து இன்று 12 ரூபாய் குறைந்து 4912 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.