சாத்தான்குளம் வழக்கு நாளை முதல் விசாரணை துவக்கம்: 9 போலீசாருக்கு சம்மன்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாத்தான்குளத்தில் செல்போன் வியாபாரிகளான தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் அடித்தே கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு அடுத்தடுத்து 9 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு நாளை முதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை துவக்கப்பட உள்ளதை அடுத்து 9 போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஒன்பது போலீசாருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றும், அவர்கள் அனைவரும் முழு போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாலை ஆஜர்படுத்த உத்தரவு செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஒன்பது போலீசாரிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
நாளை முதல் சாத்தான்குளம் வழக்கு விசாரணை ஆரம்பம் ஆவதை அடுத்து தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்