1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2017 (12:04 IST)

கலெக்டர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாகவே கந்துவட்டி கொடுமை தலைவிரித்தாடி வரும் நிலையில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர் இன்று காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இதுகுறித்து புகார் அளிக்க முயன்றனர்.
 
ஆனால் அந்த குடும்பத்தின் நான்கு பேர்களும் திடீரென ஆளுக்கொரு பக்கம் நின்று தீக்குளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேர்களும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, 'நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறுவதற்கு தனி தொலைபேசி எண் அமைக்கப்படும் என்றும் கூறினார்.