ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜூன் 2024 (13:55 IST)

மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரையுலகினர்: ஜெயகுமார் கண்டனம்..!

கள்ளச்சாராயம் குடித்து மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரையுலகினர் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: 
 
கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கிறது! இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை!
 
நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்! மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்?
 
ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.
 
மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்! என ஜெயகுமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran