ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2016 (14:13 IST)

அவர்களுக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா? மோடி மீது வேல்முருகன் பாய்ச்சல்

அவர்களுக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா? மோடி மீது வேல்முருகன் பாய்ச்சல்அவர்களுக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா? மோடி மீது வேல்முருகன் பாய்ச்சல்

குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்டால் உடனே குரல் கொடுக்கும் மத்திய அரசு தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுப்பதில்லை என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக உள்ளது.
 
மேலும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்கவில்லை.இதற்காக மத்திய அரசான பாஜக கவலைப்பட்டது போல் தெரியவில்லை. தடுக்கவும் இல்லை. இது குறித்து மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியும் பலன் இல்லை.
 
ஆனால், குஜராத் மீனவர்கள் கைது செய்யப்பட்டால், வெளிநாட்டுப் பயணத்தில் இருந்தால் கூட பாகிஸ்தான் பிரதமருடன் நமது பிரதமர் ஒப்பந்தமே போடுகிறார். ஆனால், தமிழக மீனவகள் நாள்தோறும் செத்தாலும் மோடி கண்டு கொள்வது இல்லை.
 
எனவே, மத்திய அரசை கண்டித்து, ஜூலை 1ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார்.