புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (13:42 IST)

மூன்று மணிநேரம் இருளில் மூழ்கிய அரியலூர் ரயில்நிலையம்

அரியலூர் ரயில் நிலையத்தில் திடீரென ஏற்பாட்ட தீவிபத்தால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை திருச்சி மார்க்கத்தின் இடையேயுள்ள ரயில் நிலையங்களில் முக்கியமான ரயில் நிலையங்களில் அரியலூர் ரயில் நிலையமும் ஒன்று. தஞ்சாவூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் அதிகமாக இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இங்கு நேற்றிரவு மூன்றாவது மற்றும் நான்காவது நடைமேடைக்கு இடையில்ல் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அதனையடுத்து தீ மேலும் பரவாமல் தடுக்கும் விதத்தில் ரயில் நிலையத்தின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் ரயில் நிலையம் முழுவதும் இருளில் மூழ்கியது.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் மூன்று மணிநேரம் அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் தீவிபத்து நடந்த இடத்தை ஆராய்ந்ததில் நடைமேடைகளுக்கிடையில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த சுத்தம் செய்யும் பொருட்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தா அல்லது திட்டமிட்டு பரப்பபட்டதா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.