புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (15:49 IST)

இனி பள்ளிகளில் பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் – கலக்கும் பள்ளிக்கல்வித் துறை !

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் பேஸ் ரீடிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகைப் பதிவு இதுவரை அட்டண்டன்ஸ் முறைப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வகுப்பின் போது ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்துகொள்வர்.

இந்த முறையை நவீனப்படுத்தும் விதமாக தம்ப் இம்ப்ரஷன் முறையினைப் பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியது. அதன்படி மாணவர்கள் வகுப்பறைக்குள் நுழையும் முன்பும் வகுப்பறையை விட்டு வெளியேறும் போதும் தங்கள் பெருவிரல் கைரேகையினை வைத்து செல்லும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இதனினும் அடுத்தகட்டமாக பேஸ் ரீடிங் முறையை அறிமுகப்படுத்தப் படவுள்ளது. மாணவர்களின் முகங்களை ஸ்கேன் செய்து அதன் மூலம் வருகையைப் பதிவு செய்யும் முறை இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் அறிமுகவாகவுள்ளது.

இதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் ‘மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் "பேஸ் ரீடிங் முறை" கொண்டு வரப்பட்டுள்ளது. வருகின்ற திங்கள் கிழமை அன்று அசோக் நகர் பள்ளியில் துவங்கப்படவுள்ளது’ எனப் பகிர்ந்துள்ளார்.