1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 30 டிசம்பர் 2014 (22:30 IST)

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்பு: மறியலில் ஈடுபட்ட 1000 தொழிலாளர்கள் கைது

ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



 
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 30 சதவீத அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின.
 
இயக்கப்படும் பேருந்துகள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் செல்கிறன. அரசு பேருந்துகள் இயக்கப்படுவது குறைந்ததால் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.


 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இன்று காலை முதல் ஈரோடு மாவட்டம் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி, பவானி, நம்பியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதில் 1000 க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.