1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 ஜனவரி 2025 (08:28 IST)

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

Anna Arivalayam
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென திருப்பமாக திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக வேட்பாளராக விசி சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், 2011 ஆம் ஆண்டில் இதே தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2021ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதியில், கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். ஆனால், இம்முறை அந்த தொகுதியில் திமுக போட்டியிடுவது கூட்டணி கட்சிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், திமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளராக இருப்பவர் விசி சந்திரகுமார். இவர் தற்போது திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், மேலும்  அதிமுக உள்பட சில முக்கிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் திமுக அமோக வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று கருதப்படுகிறது.


Edited by Mahendran