வெளிமாநில ரிட்டர்னுக்கு இ-பதிவு கட்டாயம் !
அனைத்து வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ பதிவு கட்டாயம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ன் கீழ் 26-04-21அதிகாலை 4 மணிக்கு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இதில், அனைத்து வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வருவோருக்கு இ.பதிவு கட்டாயம் எனவும்,வெளிநாடுகளுக்கு ரிட்டர்ன்களுக்கு இ-பதிவு கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநாடுகளிலிருந்து கப்பல், விமானம் மூலம் வருவோருக்கு இ-பதிவு கட்டாயம் எனவும், இ பதிவு செய்திருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.