வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:30 IST)

சென்னையில் விரைவில் இ-விமானம்.. 14 நிமிடங்களில் சென்ட்ரல் - தாம்பரம்..!

சென்னையில் விரைவில் இ-விமானம் இயக்கப்பட இருப்பதாகவும் பெரிய வகை ட்ரோன் என்று கூறப்படும் இதீல் ஒரு மணி நேரம் சாலை வழியாக செல்லும் பயணத்தை 14 நிமிடங்களில் சென்றுவிடலாம் என்றும் கூறப்படுகிறது.

சென்னையின் பெரிய பிரச்சனை டிராபிக் தான் என்பதும் சாலை வழியாக பயணம் என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதும் தெரிந்தது. தற்போது சென்னையில் முக்கிய பகுதிகளை மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் பயணிகள் ஓரளவுக்கு டிராபிக் தொல்லையிலிருந்து விடுபட்டாலும் இன்னும் சில பகுதிகளில் மெட்ரோ ரயில் இல்லாத நிலையில் அந்த வழியில் சாலை மார்க்கம் அல்லது மின்சார ரயில் மார்க்கம் தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையில் சென்னை முக்கிய இடங்களில் இ-விமானம் இயக்கப்பட இருப்பதாகவும் இதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதற்கான அனைத்து அனுமதியும் பெற்று அநேகமாக அடுத்த ஆண்டு இது செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் இ-விமானம் இயக்கப்பட்டால் சென்னை சென்ட்ரல் முதல் தாம்பரம் வரை செல்வதற்கு வெறும் 14 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்றும் இதை சிறியதாக விமானம் அல்லது பெரிய ரக ட்ரோன் என்று கூறலாம் என்றும் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டும் பயணம் செய்யும் வகையில் இருக்கும் இந்த இ-விமானம்  தற்போதைய ஒரு மணி நேர பயணத்தை 14 நிமிடங்களில் முடித்து விடும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva