1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (14:58 IST)

என்ன விட்டு திருட்டு தாலி கட்டினால் என்ன அர்த்தம்? துரைமுருகன் ஆதங்கம்!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேலூர் வந்த போது திமுகவினரை அழைக்கவில்லை என துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது அதிமுக பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது குறித்து திமுக துரைமுருகன் பேசியதாவது, 
 
எங்க மாவட்டத்திற்கு முதல்வர் வரப்போகிறார் என கேள்விப்பட்டதுமே சந்தோஷம் அடைந்தோம். எங்களை அழைப்பார்கள் என எதிர்ப்பார்த்தோம். அரசாங்கத்தின் நடைமுறைகளை மாநில முதல்வர் ஆய்வு செய்வது தவறில்லை.
 
அதற்காக அதிமுக எம்எல்ஏக்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த கூட்டத்தை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. வேலூரை பொறுத்த வரை திமுக பிரதிநிதிகள் அதிகம். எனவே எங்களையும் அழைத்திருக்க வேண்டும். 
 
எங்களை திட்டமிட்டு ஒதுக்கிவிட்டார்கள். இதுதான் நிர்வாகம்? இதுதான் ஜனநாயக முறை? இதுதான் நிர்வாக நடைமுறை? என்னை விட்டுவிட்டு முதல்வர் கூட்டம் நடத்த மாட்டார் என ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஆனால், அவர் திருட்டு தாலி கட்டினால் என்ன அர்த்தம்? என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.