பொன்மாணிக்கவேலுக்கு துரைமுருகன் ஆதரவு: பம்மும் அதிமுக
சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் அவர்கள் ஓய்வு பெறும் நாளில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது.
ஆனால் அவருக்கு மற்ற அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததோடு அவர் மீது குற்றஞ்சாட்டியும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அலுவலகம் இல்லை என்றும், எங்களுக்கென அலுவலகம் இல்லாததால் நாங்கள் நடுத்தெருவில் இருக்கிறோம் என்றும் அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் பொன் மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
தற்போது திமுக பொருளாளர் துரைமுருகன் பொன்மாணிக்கவேலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதாவது, சிலை திருட்டு மிக ஆபத்தானது. சிலை திருட்டை அரசே ஆதரிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியை அதிமுக அமைச்சரே விமர்சிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.