திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (11:57 IST)

போதை மாத்திரைகளை டோர் டெலிவரி செய்த இளைஞர்: சுற்றி வளைத்து பிடித்த போலீஸ்!

drug
போதை மாத்திரையை டோர் டெலிவரி செய்த இளைஞரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
சென்னையில் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் உணவு மட்டுமின்றி போதை மாத்திரையையும் ரகசியமாக டெலிவரி செய்துள்ளார் 
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த நபரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது தனியார் உணவு டெலிவரி நிறுவனம் ஒன்றில் வேலை செய்ததாகவும் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து உணவோடு போதை மாத்திரையை டெலிவரி செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 510 போதை மாத்திரைகளை கைப்பற்றி, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராஜி என்பவரையும் தேடி வருகின்றனர்.