செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 2 ஜூன் 2016 (18:32 IST)

குடிநீர் திருட்டு: வட்டாச்சியர் அதிரடி புகார்

சென்னையை அடுத்த மாதவரம் அருகே டீசல் மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவதாக வட்டாச்சியர், காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.


 

 
சென்னையை அடுத்த மாதவரம் கொசப்பூர் மாரகர நீர்வழி திட்ட கால்வாய் உள்ளது. புழல் ஏரியில் இருந்து இந்த நீர் வழித்திட்ட கால்வாய் வழியால் தான் சென்னையில் உள்ள சில பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அந்த கால்வாயில் இருந்து குடிநீர் திருடப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மாதவரம் வட்டச்சியருக்கு விசாரிக்க உத்தரவிட்டார். 
 
விசாரணையில் மஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மனோகரன், பெரியசாமி ஆகியோர் டீசல் மோட்டார்கள் மூலம் நீர் வழிதிட்ட கால்வாயில் இருந்து தண்ணீரை திருடி டேங்கர் லாரியில் ஏற்றி வணிகவளாகங்கள், ஓட்டல்களுக்கு வினியோகம் செய்து வந்துள்ளது.
 
இதையடுத்து வட்டாச்சியர் குடிநீரை திருடியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.