செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (13:23 IST)

சனாதனத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் உதயநிதி பேசுகிறார்: டாக்டர் கிருஷ்ணசாமி

சனாதனம் என்றால் என்ன என்ற அரிச்சுவடி கூட தெரியாமல் அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார் என்ன  புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார் 
 
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது  ’சனாதனம் என்பது மனித குலத்தையும் தாண்டி எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தக்கூடியது என்றும் சனாதனத்தை பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் உதயநிதி பேசுவார், அது தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். 
 
இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற உணர்வோடு பேசுகின்றனர் என்றும் இது கைவிடாவிட்டால் மிகப்பெரிய விளைவு உருவாகும் என்றும் அவர் கூறினார். 
 
இந்தியா என்பதும் பாரதம் என்பதும் ஒன்றுதான் என்றும் பாரதம் என முன்பே பெயர் மாற்றம் செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 
 
 மேலும் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை அமைச்சரவையில் வைத்திருப்பது அழகல்ல என்ற நீதிமன்றம் கூறியுள்ளதை அடுத்து இனியாவது செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி இழந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 
Edited by Mahendran