திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 5 மே 2022 (19:45 IST)

ஹைதராபாத்தில் ஆவண படுகொலை!

ஹைதராபாத்தில் ஆவண படுகொலை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சில மாதங்களுக்கு முன் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நபர் இன்று பொதுவெளியில் வைத்துப்  படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் பகுதியைச் சேர்ந்தவர்  நாகராஜூ. இவர் மலக்பேட் என்ற பகுதியில்  உள்ள கார் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாகப் பணிபுரிகிறார்.

இவர் அஸ்ரின் சுல்தானா என்ற பெண்ணும் ஒன்றாக கல்லூரியில் படித்து வந்துள்ளனர். அப்போது, இருவருக்கும் இடையேயான பழக்கம் காதல் உண்டானது. எனவே கடந்த ஜனவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்பெண் இந்துவாக மதம் மாறி, தனது பெயரை பல்லவி என மாற்றிக்கொண்டார். இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த நாகராஜு  இன்று பொதுவெளியில் வைத்துப்  படுகொலை செய்யப்பட்டார்