புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2020 (14:43 IST)

கொரோனா சோதனை செய்யும் மருத்துவர்களுக்கே கொரோனா- நெல்லையில் அதிர்ச்சி தகவல்!

நெல்லையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் இரு மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தினமும் சுமார் 900 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்படுகின்றனர். இதில் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு பெண் மருத்துவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து தற்போது மேலும் ஒரு மருத்துவர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 10 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா சோதனை மேற்கொள்ளும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே ஒரு கருவி மூலம் மட்டும்தான் தற்போது சோதனை மேற்கொள்ளப்படுகிறது.