1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 30 மே 2017 (13:19 IST)

கருணாநிதியை பார்க்க வராமல் இருப்பதே பரிசுதான்: ஸ்டாலின் கருத்தால் தொண்டர்கள் அதிர்ச்சி!

கருணாநிதியை பார்க்க வராமல் இருப்பதே பரிசுதான்: ஸ்டாலின் கருத்தால் தொண்டர்கள் அதிர்ச்சி!

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. அவர் தனது 94 வயதில் அன்று அடியெடுத்து வைக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் தமிழக சட்டசபையில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆனதையடுத்து அவரது வைர விழாவும் கொண்டாடப்பட உள்ளது.


 
 
இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் அன்றைய தினம் கருணாநிதியின் வரை விழாவில் பங்கேற்க உள்ளனர். ஆனால் இவற்றில் கலந்துள்ளும் நிலமையில் கருணாநிதியின் உடல்நிலை என்பதால் திமுகவினர் வருத்தத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில் கருணாநிதியின் மகனும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை எழுதியுள்ளார். அதில், 80 ஆண்டுகால அரசியல் வாழ்வில் ஓய்வின்றி தமிழ் இனத்திற்காக உழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி.
 
அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தற்போது உடல்நலம் தேறி வருகிறது. இந்நிலையில் அவருக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதோடு நோய் தொற்று ஏற்படாமல் இருக்கவும் கருணாநிதியை சந்திக்க அவரது பிறந்தநாளான ஜூன் 3-ஆம் தேதி தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம்.
 
கருணாநிதியின் உடல்நலம் தேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தலைவர் பிறந்தநாளில் அவரை சந்திக்காமல் தவிர்ப்பதே தொண்டர்கள் அளிக்கும் சிறப்பு பரிசு, என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று அவரை தொண்டர்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளதும். அதுவே அவருக்கும் அளிக்கும் பரிசு என கூறியிருப்பதும் திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.