வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (08:44 IST)

வைகோ மனு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் 4வது வேட்பாளர் போட்டியா?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு சிறை என்பதால் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட எந்த பிரச்சனையும் இல்லை என்றாலும் ஒரு பாதுகாப்புக்காக 4வது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ என்பவரை திமுக நேற்று களமிறக்கியது
 
இந்த நிலையில் திமுக 4வது வேட்பாளரை களமிறக்கியது வேறு காரணத்திற்காக என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது வைகோவின் வேட்புமனு ஏற்று கொள்ளப்பட்டாலும் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுவார் என கூறப்படுகிறது
 
அதிமுகவில் இப்போதும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பலர் இருப்பதாகவும், குறிப்பாக பாமக வேட்பாளர் அன்புமணியை பிடிக்காத பல அதிமுக எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும், அவர்கள் திமுக வேட்பாளருக்கு ஓட்டளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி, திமுக நான்காவது வேட்பாளரை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பட்டியல் வெளிவந்து அதன்மூலம் அதிமுகவில் ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் திமுக எதிர்பார்க்கின்றதாம்.
 
இந்த நிலையில் இன்னும் சிலமணி நேரங்களில் வேட்புமனு பரிசீலனை முடிந்தபின்னர் வைகோவின் மனு ஏற்றுக்கொள்ளப்படுமா? 4வது வேட்பாளரும் போட்டியிடுவது உறுதியா? என்பது தெரிந்துவிடும்