திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:55 IST)

தோல்வி என அறிவிக்கப்பட்டதும் திமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி!

தோல்வி என அறிவிக்கப்பட்டதும் திமுக வேட்பாளருக்கு நெஞ்சுவலி!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தோல்வி என்ற செய்தியை கேட்டு நெஞ்சு வலியால் துடித்த திமுக வேட்பாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் 3வது வார்டில் திமுக வேட்பாளர் போட்டியிட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில்  திமுக வேட்பாளர் தோல்வி அறிவிக்கப்பட்டது.
 
இந்த செய்தியை கேட்டதும் உடனடியாக நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்து கீழே விழுந்த திமுக வேட்பாளரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
 
தோல்வி செய்தியை கேட்டதும் திமுக வேட்பாலர் நெஞ்சுவலியால் மயக்கமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது