1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2017 (09:58 IST)

ஸ்லீப்பர் செல்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரண்டு அணியிலும் இருக்கிறார்கள்: அசத்தும் தினகரன்!

ஸ்லீப்பர் செல்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரண்டு அணியிலும் இருக்கிறார்கள்: அசத்தும் தினகரன்!

இதற்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் ஸ்லீப்பர் செல்கள் மாதிரி இருக்கிறார்கள். நேரம் வரும் போது வெளியில் வருவார்கள் என கூறினார். இந்நிலையில் தற்போது அதே கருத்தை தினகரன் ஆதரவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடியும் கூறியுள்ளார்.


 
 
தனது ஆதரவில் உள்ள 19 எம்எல்ஏக்களை தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துக்கொண்டு முதலமைச்சரை மாற்ற வேண்டும் என நெருக்கடியை கொடுத்து வருகிறார் தினகரன். ஆனால் இந்த 19 பேரால் முதலமைச்சரை மாற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சொகுசு விடுதியில் உள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏ மாரியப்பன் கென்னடியை தனியார் தமிழ் வார இதழின் இணையதளம் ஒன்று தொடர்பு கொண்டு பேட்டியடுத்து அதற்கான பதிலை வாங்கியுள்ளது. மானாமதுரை தொகுதி எம்எல்ஏவான மாரியப்பன் கென்னடி சமீபத்தில் தினகரனால் ஜெயலலிதா பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர்.
 
19 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு முதல்வரை எப்படி மாற்றமுடியும் என்ற கேள்விக்கு பதில் அளித்த மாரியப்பன் கென்னடி, 135 எம்எல்ஏக்களும் அம்மாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அம்மா இல்லை என்றால், இவர்கள் எல்லாம் சும்மா ஆனால் இவர்கள் அதை மறந்துவிட்டனர்.
 
முதல்வரை மாற்ற வேண்டும் என்று கடிதம் கொடுத்த  எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதுபோல தெரியலாம். ஆனால் தினகரன் மீது பெரும்பாலான எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் ஓபிஎஸ் அணியிலும் இருக்கிறார்கள் எடப்பாடி அணியிலும் இருக்கிறார்கள். நேரம் வரும்போது அவர்கள் வெளியே வருவார்கள் என தெரிவித்தார்.