1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 23 டிசம்பர் 2014 (13:25 IST)

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குடும்பத்துடன் குவிந்த பக்தர்கள்

அமாவாசையை முன்னிட்டு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.



 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
இங்கு கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். முக்கிய தினங்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
 
மார்கழி மாதம் அமாவாசையை முன்னிட்டு அதிகாலை ஐந்து மணிக்கே கோவில் திறக்கப்பட்டது. பின்னர் நடந்த அபிஷேக பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
 
மதியம் உச்சிகால பூஜை நேரத்தில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பண்ணாரி மாரியம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 
ஒவ்வொறு அமாவாசையும் கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலைத்துறை சார்பாக அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டுபுடவைகள் ஏலம் விடப்பட்டுவது வழக்கம். அதன்படி இந்த அமாவாசைக்கும் ஏலம் விடப்பட்டது.
 
அம்மனுக்கு சாத்தப்பட்ட புடவைகளை பக்தர்கள் ஆர்வத்துடன் ஏலம் எடுத்தனர். கோவிலை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் வெளியூரில் இருந்து நடைபயணமாக வந்த பக்தர்கள் பயன்பெற்றனர்.