செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2017 (11:37 IST)

தீபா அதிமுக; சசி அதிமுக; களத்தில் முந்துவது யார்?: பகீர் தகவல்!

தீபா அதிமுக; சசி அதிமுக; களத்தில் முந்துவது யார்?: பகீர் தகவல்!

தமிழக முதல்வராகவும் அதிமுக பொதுச்செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அவரது தோழி சசிகலா அந்த கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அவரது தலைமையை விரும்பாத அதிமுகவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிடம் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.


 
 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து ஜெயலலிதாவை தீபா சந்திக்க சசிகலா விடவில்லை. இதனால் ஊடகங்களை சந்தித்த தீபா சசிகலாவுக்கு எதிராக பல புகார்களை கூறினார். மேலும் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் போது கூட பொதுமக்களுடன் தான் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.
 
சசிகலா தரப்பினரால் தீபா புறக்கணிக்கப்பட்டது அவருக்கு பொதுமக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதா இறந்த ஒரு மாதத்திற்கு உள்ளாகவே சசிகலா அடுத்த பொதுச்செயலாளராக அவசர அவசரமாக பதவியேற்றுக்கொண்டது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
தீபாவின் பொறுமை மற்றும் ஜெயலலிதாவின் துணிச்சல் அவரிடம் இருப்பதாக பலர் தீபாவுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். பலரும் தீபாவின் வீட்டுக்கு முன்னர் குவிந்து தங்கள் ஆதரவை வழங்கி வருகின்றனர். தீபாவும் விரைவில் ஜெயலலிதாவின் புகழை காப்பாற்ற ஜெயலலிதா வழியில் மக்களுக்கு தொண்டாற்ற அரசியலில் களம் இறங்க உள்ளதாக கூறியுள்ளார்.
 
அதுமட்டுமில்லாமல் தீபாவுக்கு 60 சதவீத அதிமுகவினர் மற்றும் 50 சதவீத பெண்களின் ஆதரவு உள்ளதாக உளவுத்துறை கணித்துள்ளதாக தகவல்கள் வருகின்றனர். இதனால் சசிகலா தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. பல நிர்வாகிகள் ரகசியமாக தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே அதிமுகவினர் தீபா பேரவை தொடங்கி வருகின்றனர்.
 
தற்போது இருக்கும் சில நிர்வாகிகளை தவிர பலர் குழி பறித்து தீபாவிடம் சரணடைந்து தீபா தலைமையில் அதிமுக செயல்பட வாய்ப்புகள் உள்ளதாக போன தகவலையடுத்து அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் சசிகலா தரப்பினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.