1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 டிசம்பர் 2024 (16:24 IST)

மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை..!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் பள்ளி கொலை செய்த வழக்கின் குற்றவாளி சதீஷ்க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி மின்சார ரயிலில் தள்ளிவிட்டு மாணவி சத்யபிரியாவை கொலை செய்த சதீஷ் குற்றவாளி என சமீபத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று சதீஷ்க்கான தண்டனை குறித்த விவரத்தை மகளிர் சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பில் குற்றவாளி சதீஷ்க்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
கடந்த 2022 ஆம் ஆண்டு பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற கல்லூரி மாணவியை சதீஷ் தள்ளிவிட்டதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
 
சதீஷ், சத்ய பிரியா ஆகிய இருவரும் காதலித்து வந்ததாகவும், சதீஷின் நடவடிக்கை பிடிக்காததால் அவர் பிரிய சத்யா முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், சத்யாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை அல்லி குளத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்   சதீஷ் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி இன்று அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.
 
 
 
Edited by Siva