வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (13:27 IST)

தொகுதியில் கவனம் செலுத்துங்கள் – கார்த்திக் சிதம்பரத்துக்கு கோர்ட் அறிவுரை !

கோர்ட்டில் செலுத்தப்பட்ட பிணைத் தொகையைத் திரும்பக் கார்த்திக் சிதம்பரத்தை தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டுமென ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் 10 கோடி ரூபாயைப் பிணையாக செலுத்தி வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்.  

இதற்கிடையே கடந்த மாதம் ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வர அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது, வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றால் மீண்டும் பிணைத் தொகையாக ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் முதலில் கட்டிய 10 கோடியைத் திரும்ப கேட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ’10 கோடி ரூபாய் வட்டிக்குக் கடன் வாங்கியத் தொகை. அதனால் அதைத் திரும்பத் தரவேண்டும்’ எனக் கூறியிருந்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அவர் வெற்றிபெற்ற தொகுதியைக் கவனியுங்கள் எனக் கூறியுள்ளது.