1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 மார்ச் 2017 (13:36 IST)

பேஸ்புக்கில் பல பெண்களுடன் காதல், உல்லாசம்... வசமாய் சிக்கிய கூரியர் மேனேஜர்!!

சென்னையில் பேஸ்புக் மூலம் காதல் செய்து உல்லாசம் அனுபவித்து, திருமண பேச்சை எடுத்ததும் பெண்களை கழற்றிவிட்ட கூரியர் மேனேஜரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


 
 
புதுக்கோட்டையை சேர்ந்த அப்துல் ரசீப், சென்னை பொத்தேரியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். 
 
சென்னை அண்ணா பல்கலைக்கழக ஊழியர் குடியிருப்பை சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண் ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி, தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
 
அப்துல் ரசீப்பும், அந்த பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளனர். தினமும் பேஸ்புக் மூலம் பேசி வந்துள்ளனர்.
 
தொடக்கத்தில் இருந்த நட்பு நாளைடைவில் காதலாய் மாறியது. ஒரு ஆண்டு இருவரும் நேரடியாக சந்திக்காமல் பேஸ்புக் மூலமாகவே காதலித்து வந்துள்ளனர். பின்னர் வேளச்சேரியில் உள்ள தனியார் ஷாப்பிங் மாலில் முதன் முறையாக சந்தித்து அதன் பின்னர் அடிக்கடி பல இடங்களில் சந்தித்துள்ளனர்.
 
இதற்கிடையே திருமணம் செய்வதாக கூறி, அப்துல் ரசீப் பலமுறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். இந்நிலையில் திருமணம் குறித்து அந்த பெண் பேச ஆரம்பித்ததும் ரசீப் அந்த பெண்ணிடம் இருந்து விலக ஆரம்பித்துள்ளார்.
 
இதனையடுத்து தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, ஆதரங்களுடன் அந்த பெண், சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
 
போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை மாம்பாக்கத்தில் தங்கி இருந்த அப்துல் ரசீப்பை கைது செய்தனர். போலீசார் ரசீப்பை விசாரணை செய்த போது, இது போல பேஸ்புக் மூலம் பல பெண்களிடம் பழகி உல்லாசமாக இருந்துள்ளார் என்பது அம்பலமானது.