தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி...? மருத்துவமனையில் சிகிச்சை
தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி... மக்கள் அச்சம் !
சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக செய்திகள் வெளியானது.இதுவரை 114 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நோயின் தாக்கத்தை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் அவர்கள் அனைவரும் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய அமீரகமான துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 14 பேரை மருத்துவக் குழுவினர் சோதித்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரானா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் பூந்தமல்லியில் உள்ள பொதுசுகாதார நிலையத்தில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். மேலும் , இதுகுறித்த முழு பரிசோதனைகளும் செய்த பின் முடிவுகளின் அடிப்படையில் அவர்கள் வெளியேறுவார்களா இல்லை அங்கு அனுமதிக்கப்படுவார்களா என்பது தெரியவரும் என தகவல் வெளியாகிறது.