செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 27 ஜூலை 2024 (18:54 IST)

மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்தை போக்குவரத்து துறை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மகளிர் விடிய பயண புதிய பேருந்து மற்றும் நான்கு, புதிய புறநகர் பேருந்துகள் சேவையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
 
இதில் சென்னைக்கு இரண்டு பேருந்துகளும், பெங்களூருக்கு ஒரு பேருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் ஐந்து பேருந்துகள் செல்ல உள்ளது. 
 
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.