1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 26 ஜூலை 2016 (13:34 IST)

கௌதமியை ஓரம்கட்டும் ஸ்ருதி: மருத்துவமனையில் குடைச்சலில் கமல்

நடிகர் கமல் மாடி படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து மருத்துவமனையில் உள்ளார். இந்நிலையில் அவருக்கு கௌதமி, ஸ்ருதி இடையே நிலவி வரும் புகைச்சல் புதிய தலைவலியை கொடுத்துவருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
நடிகர் கமல் வாணி கணபதியை திருமணம் செய்தார். பின்னர் அவருடனான வாழ்க்கை கசந்து போக, இந்தி நடிகை சரிகா தகூருடன் இணைந்து வாழ்ந்து இரண்டு குழந்தைகளை பெற்ற பின்னர் அவரை திருமணம் செய்தார். சில வருடங்களுக்கு பின்னர் சரிகாவையும் பிரிந்தார் கமல்.
 
அதன் பின்னர் கமல் நடிகை கௌதமியுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். கௌதமியின் பிள்ளைகள், தனது பிள்ளைகள் ஸ்ருதி என ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் கமலின் மகள் ஸ்ருதிக்கும், கௌதமிக்கும் இடையே புகைச்சல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
 
கமல், கௌதமி, இருவரின் பிள்ளைகள் என ஒரே குடும்பமாக விழாக்களுக்கு வருகைபுரியும் அவர்கள் தற்போது தனித்தனியே வருகை புரிய ஆரம்பித்துள்ளார்கள். கமலின் படங்களுக்கு அவரது காஸ்டியூமை வீட்டில் உள்ளவர்களே தேர்ந்தெடுப்பது வழக்கம்.
 
கமலின் விஸ்வரூபம் படத்திற்கு கௌதமி தான் கமலின் காஸ்டியூம் டிசைனராக இருந்தார். அதேப்போல் கமல் தற்போது நடித்து வரும் சபாஷ் நாயுடு திரைப்படத்திற்கு கௌதமி மற்றும் ஸ்ருதி ஆகியோர் தான் காஸ்டியூம் டிசைனர்.
 
இங்குதான் கௌதமி, ஸ்ருதி இடையே மோதல் போக்கு ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவில் சபாஷ் நாயுடு காஸ்டியூம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்து வந்ததாம். கௌதமி கொடுக்கும் காஸ்டியூம்களை ஸ்ருதி ஏதாவது குறை சொல்லி, தேவையின்றி நிராகரித்து வந்துள்ளார்.
 
இது குறித்து கமலிடம், கௌதமி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சபாஷ் நாயுடு படம் குறித்து சமூக வலைதளத்தில் அமெரிக்காவில் இருந்து ஸ்ருதி வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் கூட கௌதமி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் எலும்புமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ள கமலுக்கு இந்த பிரச்சனை தலைவலியாக இருப்பதாகவும். கமல் மருத்துவமனையில் இருப்பதால் இந்த விவகாரம் தற்போது அமைதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.